முட்டை மாசி கருவாடு பொரியல் – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தே.பொ.
மாசி கருவாடு – 2 மே.க.
முட்டை – 2
வெங்காயம் – 1/4+1/4 நறுக்கியது
தக்காளி – 1/2 +1/2
கறிமசால் பொடி- 1 தே.க.
மிளகாய்பொடி- 1 தே.க.
வெண்ணை – 2 மே.க.
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தே.க.
உப்பு – தே.அ.

செய்முறை
1. மாசி கருவாடை கழுவி டீ வடிகட்டியில் வடிக்கவும்.
2. வாணலியில் 1 மே.க. வெண்ணை போட்டு, 1/4 வெங்காயம், 1/2 தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்பொடி, உப்பு, கறிமசால் பொடி , கருவாடு சேர்த்து வணக்கி, 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
3. இன்னொரு வாணலியில் வெண்ணையில், 1/4 வெங்காயம், 1/2 தக்காளி, முட்டை , உப்பு போட்டு உதிர்உதிராக வணக்கவும்.
4. அதற்குள் கருவாடு வெந்து இருக்கும். முட்டையை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டவும்.
5. காளிபிளவர் சாதத்துடன் சூடாக பறிமாறவும்.

 சமையல் குறிப்பு: 

Follow us on Social Media