முட்டை முந்திரி புட்டிங் – சரவணன் பெருமாள்

இந்தப் பெயரை நானாகவே வைத்துக் கொண்டேன். இது சில வருடங்களுக்கு முன் ஏதோவொரு TV சமையல் நிகழ்ச்சியில் வந்ததாக என் மனைவி சொன்னார்கள். இதன் சுவை கிட்டத்தட்ட சீம்புப் பாலின் சுவை போல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் பால் – 1/2 டம்ளர்
பால் – 1/2 டம்ளர்
முந்திரி – 5
முட்டை – 2
மிளகுத் தூள் – தேவைக்கு
சுக்குத் தூள் – தேவைக்கு
உப்பு – சிறிது

செய்முறை:
பாலில் முந்திரியை ஊறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும், முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும், பிறகு ஒரு சிரிய பவுலில் பாலில் அரைத்த முந்திரி, தேங்காய் பால், முட்டை, மிளகு, சுக்கு, உப்பு அனைத்தையும் நன்றாக கலந்து இட்லி சட்டியில் வேகவைத்து இறக்கவும். இதை ஒரு வேளை உணவாக எடுக்கலாம். இது எனக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு உப்பிற்கு பதில் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி உபயோகிக்கலாம்.

 

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001213348037

Follow us on Social Media