முட்டை ரோஸ்ட் – ஆசியா உமர்

தே.பொ:-
அவித்த முட்டை – 4 ( கீறி விட்டு கொள்ளவும்)
நெய் – 2 டீஸ்பூன்
கிள்ளிய மிளகாய் வற்றல் – 1
கருவேப்பிலை – 2 இணுக்கு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் ,சீரகத்தூள் – தலா 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு.
.
செய்முறை:-
முட்டையை வேக வைத்து தோல் எடுத்து கீறி விட்டுக் கொள்ளவும்.
கடாயில் நெய் விட்டு உருகவும் வற்றல் கருவேப்பில்லை தாளித்து மேற்சொன்ன மசாலா சேர்த்து டக்கென்று முட்டையை போட்டு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
முட்டை ரோஸ்ட் தயார்.

Follow us on Social Media