முருங்கைக்காய் மட்டன் குழம்பு – பிருந்தா ஆனந்த்

தேவையான பொருட்கள் ::

மட்டன் – 1/2 கி
சின்ன வெங்காயம் – 150 கி
தக்காளி – 4
இஞ்சி பூண்டு
அரைத்த விழுது – 2 ஸ்பூன்
பட்டை – 4
கிராம்பு – 6
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – தே. அளவு
மல்லி தூள் – தே. அளவு
மஞ்சள் தூள் – தே. அளவு
மிளகு சீரகப்
பொடி – 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் – தே. அளவு
கறிவேப்பிலை – தே. அளவு
கொ. மல்லி இலை – தே. அளவு
உப்பு – தே. அளவு
முருங்கைக்காய் – 3

#செய்முறை ::

*மட்டன், மஞ்சள் தூள், உப்பு, 1 ஸ்பூன் இ. பூ விழுது, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
* இஞ்சி பூண்டு, சோம்பு, கிராம்பு, 5 சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
* நல்லெண்ணெய் + பட்டை+வெங்காயம்+தக்காளி மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும்.
*பிறகு மிளகாய்த் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகு சீரகத் தூள் சேர்த்து வதக்கவும்.
*வேக வைத்த மட்டனையும், முருங்கைக்காயும் சேர்க்கவும்.
*மல்லிஇலை, கறிவேப்பிலை சேர்த்து கொதித்தால் குழம்பு தயார்.
{கிரேவி வேண்டுமானால் குறைவாக நீர் சேர்க்கவும், தேங்காய் விழுது சேர்க்க விருப்பம் உள்ளவர்கள் கடைசியாக சேர்க்கலாம். }

சமையல் குறிப்பு :

Follow us on Social Media