முருங்கைக்கீரை சூப் – ஆசியா உமர்

தே.பொ:-
ஆய்ந்த முருங்கைக் கீரை – 2 கப்
நெய் அல்லது நல்லெண்ணய்– 2 டீஸ்பூன்
கிள்ளிய மிளகாய் வற்றல் – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு நறுக்கியது – 8 பல்
நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
தேங்காய்ப்பால் – ஒரு கப் ( மீடியம் திக்னெஸ்)
உப்பு – தேவைக்கு.

செய்முறை:-
முருங்கைக் கீரையை காம்பு நீக்கி ஆய்ந்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.

ஒரு கடாயில் நெய் விட்டு சீரகம்,வற்றல் ,பூண்டு,வெங்காயம் போட்டு தாளித்து கீரையைச் சேர்த்து நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். சுவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.

கீரை நன்கு வெந்த பிறகு தேங்காய்ப்பால் விட்டு சிம்மில் வைக்கவும்.

நுரை கூடி கொதி வரவும் அணைக்கவும்.
சுவையான முருங்கைக் கீரை சூப் தயார்.
அப்படியே கீரையுடன் சூப்பை சாப்பிடலாம்.நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

(வாயு தொல்லை இருப்பவர்கள் அளவாகச் சாப்பிடவும். கொல்லைச் சிக்கல் இருப்பவர்கள் வாரம் ஒரிரு முறை இப்படி செய்து சாப்பிடலாம், இதே முறையில் அகத்திக் கீரையையும் செய்து சாப்பிடலாம்)

சமையல் குறிப்பு:

Follow us on Social Media