முருங்கைக்கீரை – தேன்மொழி அழகேசன்

1.பொரியல்# வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் போட்டு பொரிந்ததும் அரிந்த வெங்காயம் ,2வரமிளகாய்,பூண்டு 5 பல்(அரிந்தது) நன்றாக வதக்கியதும் நன்றாக கழுவிய கீரையை போடவும் , மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.கடைசியாக துருவிய தேங்காயை போட்டு இறக்கி வைக்கவும்

2 .சாதம்; பன்னீரை துருவிக் கொள்ளவும்.வடச்சட்டியில் நெய் போட்டு கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை , சிறிது வணக்கிய கீரை போடவும்.பின் பன்னீரை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வணக்கவும்

3. பிளைன் சூப்: கீரை,மஞ்சள்தூள்,சீரகம் 1/2 தேக,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.நன்றாக கொதித்தவுடன் இறக்கி வடி கட்டவும்.அதில் மிளகுத்தூள்,நெய் சேர்த்து அருந்தவும்.

4 .துவையல் ;வடிகட்டின கீரையோடு 5 பச்ச வெங்காயம்,3 பல் பூண்டு,1 வர மிளகாய்,1/2 தேக எலுமிச்சை சாறு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.அருமையான துவையல் ரெடி.

முருங்கைக்கீரை பயன்கள்#
இதில் கால்சியம்,இரும்புச்சத்து,வைட்டமின் பி,வைட்டமின் பி2,வைட்டமின் சி சத்துக்கள் மிகுதியாக உள்ளது.வாரம் இரண்டு முறை எடுக்கலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media