முருங்கை கீரை , பூ சூப் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

சின்ன வெங்காயம் – 1 கப்
தக்காளி – 2
முருங்கை கீரை – தே . அளவு
முருங்கை பூ – 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு
இடித்தது – 2 ஸ்பூன்
மிளகு சீரக பொடி – 2 ஸ்பூன்
நெய் – தே. அளவு
இந்துப்பு – தே. அளவு
பசுமஞ்சள் விழுது – 1/2 ஸ்பூன்

#செய்முறை::

*நெய்யில் வெங்காயம் , தக்காளி சேர்த்து
வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

*பிறகு முருங்கை கீரை மற்றும் பூ வை கலவையில் சேர்த்து வதக்கி இந்துப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

*கொதித்த பின் பசுமஞ்சள் அரைத்த விழுது, மிளகு,சீரக தூள் சேர்த்து அருந்தினால் சுவையான முருங்கை கீரை
சூப் தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media