முள்ளங்கி மசாலா, பீர்க்கைங்காய் பொரியல் & துவையல் – தேன்மொழி அழகேசன்

1.முள்ளங்கி மசாலா:
தேவையான பொருட்கள்
முள்ளங்கி 500 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 1 மேக
கறிமசாலா 1 மேக
தக்காளி 1/2 அல்லது சின்னது
சின்ன வெங்காயம் 5 நீள வாக்கில் அரிந்தது
மஞ்சள் தூள் 1/2 தேக
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை
செய் முறை#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கியதும் அரிந்த காய் தேவையான உப்பு,மசாலா சேர்த்து வணக்கவும்.1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.(குக்கரில் கூட 1 விசில் வைக்கலாம்)நூற்கோல் இதே முறையில் செய்யலாங்க.


2. பீர்க்கைங்காய் பொரியல்#
எப்பவும் செய்வது போல கடைசியாக முட்டை ஊற்றி வதக்கவும்.( முட்டை வேண்டாம் என்பவர்கள் தேங்காய் சேர்த்து கொள்ளவும்)


3 . பீர்க்கைங்காய் துவையல்#
தோல் அல்லது காய் + இஞ்சி 1/4 இஞ்ச்+ பூண்டு4 பல்+வரமிளகாய்1+உப்பு+1 இஞ்ச் புளி+ தேங்காய் 1 சில்.. அனைத்தையும் தேங்காய் எண்ணெய் ஊற்றி வணக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.தாளித்து ஊற்றவும்.வேக வைத்த முட்டைக்கு நல்ல துணை…

சமையல் குறிப்பு :

Follow us on Social Media