முள்ளங்கி முட்டை மசாலா – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

முள்ளங்கி – 1/4 கி
முட்டை – 3
வெங்காயம் – 1
சீரகம் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – தே . அளவு
தேங்காய் எண்ணெய் – தே . அளவு
உப்பு – தே . அளவு
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 ஸ்பூன்
சிக்கன் மசாலா – 1/2 ஸ்பூன்
மிளகு சீரக தூள் – 1 ஸ்பூன்

செய்முறை ::

*தேங்காய் எண்ணெயில் கடுகு , சீரகம்,காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்,

*பிறகு சிறிதாக நறுக்கிய முள்ளங்கியை உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்,

*முள்ளங்கி முக்கால் பதத்திற்கு வெந்தவுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லி தூள்,சிக்கன் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்,

*பிறகு முள்ளங்கியுடன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறி மிளகு சீரக தூள் சேர்த்து வதக்கவும்.

* சுவையான முள்ளங்கி முட்டை மசாலா தயார்.

{குறிப்பு : மசாலா வகைகள் சேர்க்காமல் வெங்காயம்+முள்ளங்கி+முட்டை+மஞ்சள்தூள் +மிளகு சீரகத்தூள் மட்டும் சேர்த்தும் படம் 1 ல் உள்ளது போல் செய்யலாம்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media