மூலிகை டீ – ஆசியா உமர்

தே.பொ:-
கிரீன் டீ பேக் 2 அல்லது ப்ளாக் டீ பேக் – 1
தண்ணீர் – 4 கப்
இஞ்சி தட்டியது – 2 டேபிள்ஸ்பூன்
துளசி இலை – 6
கற்பூரவல்லி –இலை – 2
தேவைக்கு – பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி (விரும்பினால்)

செய்முறை:-
தண்ணிரில் இஞ்சி தட்டி போட்டு,துளசி,கற்பூரவல்லி இலை,சேர்த்து கொதிக்க விடவும்.
டீ பேக் போட்டு அடுப்பை அணைக்கவும்.
வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.

ஊரிலும் சரி இங்கும் சரி இந்த டீ அடிக்கடி போட்டு குடிப்பதுண்டு. அதற்காகவே இங்கும் சிறிய தொட்டிகளில் இந்தச் செடிகளை வளர்த்து வருகிறேன்.

முக்கியக் குறிப்பு:-
சளி,இருமல்,ஆஸ்துமா தொந்திரவுக்கு துளசி,கற்பூரவல்லி டீ அருந்தலாம்.
வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.ஜீரண சக்தியை மேம்படுத்தும்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media