மொகல் முட்டை குழம்பு – ராணி விஜயன்

நேரம் : முப்பது நிமிடங்கள் (சுமாராக)

வ.எண் பொருள் அளவு புரதம் கார்ப் கொழுப்பு நார் கலோரி
1 முட்டை 5 32 GM 5 GM 32 GM 0 GM 417
2 தேங்காய் ½ மூடி 2 GM 5 GM 16 GM 5 GM 178
3 பாதாம் 6 1 GM 0 GM 4 GM 0 GM 47
4 முந்திரி 6 2 GM 1 GM      3 GM 0 GM 50
5 தக்காளி 2 2 GM 7 GM 0 GM 3 GM 36
6 சின்ன வெங்காயம் 50 GM 1 GM 6 GM 0 GM 1 GM 30
7 இஞ்சி  பூண்டு கலவை 1 ஸ்பூன் 0 0 0 0 10
8 நல்லெண்ணெய் 3 ஸ்பூன் 0 GM 0 GM 13 GM 0 GM 122
  இரண்டு பேருக்கு மொத்தம் 40 GM 24 GM 68 GM 9 GM 840
  ஒருவருக்கு மொத்தம் 20 GM 12 GM 34 GM 4.5 GM 420

 

தேவையான பொருள்கள் :

 1. முட்டை –              5 NO.
 2. தேங்காய் –           ½ மூடி
 3. பாதாம் –           6
 4. முந்திரி –           6
 5. தக்காளி –           2
 6. சின்ன வெங்காயம் –       50 GRAMS
 7. இஞ்சி பூண்டு கலவை –   1 SPOON

மசாலாவுக்கு :

 1. செட்டிநாடு தூள் – 1 ஸ்பூன்
 2. மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
 3. மல்லி பொடி – 1 ஸ்பூன்.
 4. கறி மசால் – 1 ஸ்பூன்.
 5. மஞ்சள் தூள்               – ½ ஸ்பூன்
 6. சீரக பொடி – ½ ஸ்பூன்
 7. உப்பு – தேவைக்கு ஏற்ப

தாளிப்புக்கு:

 1. பிரியாணி இலை – 1
 2. பட்டை – 1
 3. லவங்கம் – 2
 4. ஏலக்காய் – 2
 5. மராட்டி மொக்கு – 2
 6. உலர் வெந்தய இலை – 1 ஸ்பூன்
 7. உளுந்து – ¼ ஸ்பூன் (தேவைப்பட்டால்)
 8. கடுகு – ¼ ஸ்பூன்
 9. கறிவேப்பிலை – 10

mohul-egg-gravy

 

செய்முறை:

 1. தேங்காய், பாதாம், முந்திரி  ஆகியவற்றை  மிக்சியில்  போட்டு  பேஸ்ட்  செய்யவும்.
 2. தக்காளி 2 போட்டு பேஸ்ட் செய்யவும்.
 3. இஞ்சி பூண்டு சேர்த்து  பேஸ்ட் செய்யவும்.
 4. முட்டை ஐந்தையும் வேக வைக்கவும்.
 5. அடுப்பில் கடாய் வைத்து  3 ஸ்பூன்  நல்லெண்ணெய்  விடவும்.
 6. எண்ணெய் காய்ந்ததும் தாளிப்பு பொருள்களை ஒவ்வொன்றாக  சேர்க்கவும்.
 7. வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
 8. இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கவும்.
 9. தக்காளி பேஸ்ட்  போட்டு  நன்றாக வதக்கவும்.
 10. அனைத்து தூள்களையும், உப்பையும்  சேர்க்கவும். பச்சை வாசனை போகும்வரை சமைக்கவும்.
 11. முட்டைகளை பாதியாகவோ வட்ட வடிவிலோ  விருப்பம் போல்  வெட்டிக் கொள்ளவும்.
 12. வெட்டிய முட்டைகளை அப்படியே கடாயில் உள்ள மசாலாவில் வைக்கவும்.
 13. ஐந்து நிமிடம் கழித்து பாதாம் , முந்திரி , தேங்காய் பேஸ்டை சேர்க்கவும் சிறிது தண்ணீர் ஊற்றி குறை வெப்பத்தில் வேக விடவும்.
 14. தேவைக்கேற்ப தண்ணீர் விடவும்.
 15. ஐந்து நிமிடம் கழித்து முட்டைகளை  மெதுவாக திருப்பி விடவும்.
 16. தண்ணீர் ஓரளவு சுண்டியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

மொகல் முட்டை மசலா தயார். சூடாக பரிமாறவும்.

இதனை எந்த உணவுடன் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

img_5916-1

இணைப்புக்கு : https://www.youtube.com/watch?v=LDRrOlUAXQM

 

(குறிப்பு : பேலியோ மக்கள் சப்பாத்தி , தோசை, அரிசி சாப்பாடு தவிர்த்து, பெலியோ தோசை, காலிபிளவர் சாப்பாடு ஆகியவற்றை கலந்து சாப்பிடவும்)

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000349157027

Follow us on Social Media