ரசபன்னீர் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
பன்னீர் 500 கிராம்
தக்காளி 3
சீரகம் 1 டேக
மிளகு 1 டேக
பூண்டு 10 பல் சிறியது
மஞ்சள் தூள் 1/2 டீக
மிளகாய்தூள் 1/2 டீக
உப்பு தேவையான அளவு
தாளிக்க சோம்பு கருவேப்பிலை பெருங்காயம்,நெய்,கொத்தமல்லி சிறிதளவு
செய் முறை#
வடச்சட்டியில் சிறிது வெண்ணெய் சேர்த்து முழு தக்காளியை சூடு பண்ணி தோலை உரிச்சு எடுத்துட்டு ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதில் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய்தூள் தண்ணீர் சேர்க்கவும் .ரசத்துக்கு அரைப்பது போல் மிக்சியில் சீரகம் மிளகு பூண்டு போட்டு அரைத்து அதனை வெண்ணெயில் ஒரு வதக்கி வதக்கி போடவும்.வாசம் கமகமன்னு இருக்கும். பச்சை வாசம் போனதும் பன்னீரை சேர்க்கவும்,. அடுப்பை அணைக்கவும்.கடைசியாக வடச்சட்டியில் நெய் விட்டு சோம்பு கருவேப்பிலை பெருங்காயம் மிளகாய் வத்தல் போட்டு தாளித்து ஊற்றவும்.சிறிது கொத்தமல்லி போட்டு அலங்கரிக்கவும்.
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்
பன்னீர் இரண்டு பேருக்கும் ,ரசத்தை நான்கு பேரும் அருந்தலாம்.ஐடியா கொடுத்த தம்பி Sriram Subramanian க்கு நன்றி.பி.கு.இதே முறை எலுமிச்சை ரசத்துக்கும் பொருந்தும்

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media