வல்லாரை கீரை துவையல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

வல்லாரை கீரை : அரை கட்டு
தேங்காய் துருவல் : நான்கு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் : 2
மிளகு : 10
புளி : ஒரு நெல்லிக்காய் அளவு
தேங்காய் எண்ணை : 2 தேக்கரண்டி
கடுகு & கறிவேப்பிலை : தாளிக்க
உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, மிளகாய் வற்றல் தாளித்து, பின் வல்லாரை கீரை & தேங்காய் துருவல் போட்டு நன்றாக வதக்க வேண்டும். வதங்கியவுடன் ஆற வைத்து புளி, மிளகு & உப்பு சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும்.

பின் கடுகு & கறிவேப்பிலை தாளித்து, சட்னியுடன் சேர்த்து பரிமாற வேண்டும்.

வல்லாரை கீரை துவையல் தயார்.

முட்டை ஆம்லேட்டுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media