வாத்துக்கறி வாக்வாக்? வறுவல் – திருப்பூர் கணேஷ்

பேலியோ : அசைவம்

பொதுவா வாத்துக்கறினா வாடை வரும்ன்னு சொல்லுவாங்க…. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க… நம்ம பயன்படுத்துற தென் இந்தியன் மசாலால எல்லா வாடையும் ஓடிப்போகும்…. வாத்துக்கறி அடிக்கடி சாப்பிட பழகிக்கங்க ஏன்னா நம்மள மாறி அதுவும் அசைவம்…☺️ சும்மா சொல்லலைங்க அதுக்கும் நம்மள மாறி கொழுப்பு ரொம்ப ரொம்ப அதிகம்….??

தேவையான பொருட்கள்:

1. வாத்துக்கறி – 500 கிராம்
2. தேங்காய் எண்ணை – 2 தேக்கரண்டி
3. கடுகு – சும்மா 2 போடுங்க
4. சின்ன வெங்காயம் – 100 கிராம்
5. பச்சைமிளகாய் – 3 to 4
6. கறிவேப்பிலை – 3 கொத்து
7. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 1/2 டீஸ்பூன்
8. கொத்தமல்லி தலை – 10 அ 15
9. தக்காளி – 1 அ 2
10 .மஞ்சள் தூள் – 3 ஸ்பூன்
11. உப்பு – தே.அ
12. தயிர் – 2 மேசை கரண்டி

வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி மூன்றையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

மசாலா அரைக்க:
1. சோம்பு – 1 ஸ்பூன்
2. சீரகம் – 1 ஸ்பூன்
3. மிளகு – 1 ஸ்பூன்
4. கிராம்பு – 3
5. பட்டை – 2 இன்ச்
6. ஏலக்காய் – 1
7. அன்னாச்சி மொக்கு – 1
8. கருப்பு ஏலக்காய் – 1 (மராட்டி மொக்கு)
9. மல்லித்தூள் – 1 1/2 டீஸ்பூன்
10. மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

1 முதல் 8 வரை உள்ள அனைத்தயும் வெறும் கடாயில் மிதமான தீயில் வைத்து வறுத்து ஆறியவுடன் டிரையான மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் 9 மற்றும் 10ஐ போட்டு நைசாக அரைத்து வைத்துகொள்ளவும்.

செய்முறை :

வாத்து வாங்கும் போது தோலோட நல்லா தீயில் வாட்டி வெட்டி வாங்கீட்டு வாங்க. ஒரு பாத்திரத்தில் கறியை போட்டு மஞ்சள்தூள் 2 ஸ்பூன், உப்பு 1ஸ்பூன் போட்டு கலக்கி 10 நிமிஷம் கழித்து 2 அ 3 முறை நீரில் கழுவி எடுத்து குக்கர்ல போடவும்.

அதன் பின் மஞ்சள் தூள் 1 ஸ்பூன், உப்பு, தயிர் 2 மேசைகரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன், அரைத்த மசாலாவில் பாதி போட்டு, கறிவேப்பிலை 1 கொத்து, கொத்தமல்லி தலை 5 தண்டு கிள்ளிப் போட்டு நன்றாக கலக்கி 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் ஊறவைத்து பின் அடுப்பில் வைத்து 1 டம்ளர் நீர் ஊற்றி 5 அ 6 விசில் விட்டு இறக்கி விசில் அடங்கும் வரை வைக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பின் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை 1-கொத்து போட்டு 5 நிமிடம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 1/2 டீஸ்பூன் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளி போட்டு வதங்கியபின் அரைத்த மசாலாவின் மீதியை போட்டு 2 நிமிடம் வதக்கவும் அப்புறம் என்ன அடுத்து குக்கர்ல இருக்க கறி+கொழுப்பு நீரை கொட்டி மூடி போட்டு 15 நிமிடம் வேகவைக்கவும் அதன் பின் 5 நிமிடம் நல்லா சுண்டும் வரை ஓட்டிவிட்டு கொழுப்பு திரண்டு வரும்போது கறிவேப்பிலை கொத்தமல்லி தலை பொடியாக கிள்ளி போட்டு இறக்கினால் கம கம வாக்வாக் வாத்துக்கறி வறுவல் ரெடி.

அத பிளேட்ல எடுத்து போட்டா சுத்தியும் கொழுப்பு அழகா மிதங்கும் பாருங்க.. எடுத்து வாய்ல போட்டா சும்மா டேஸ்ட் அள்ளும்…?? அப்புறம் என்ன சாப்பிட வாங்க காலி ஆகறதுக்குள்ள.?

பி.கு
இதனுடன் கொதிக்கும் போது ஒரு வாத்து முட்டையை அவிச்சு கீறிப்போட்டா மசாலால முட்டை ஊறி டேஸ்ட் நல்லா இருக்கும்.

வாழ்க கொழுப்புடன்! வாழ்க வளமுடன்!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media