வாத்து வருவல் – யசோ குணா

வாத்து கறி சிரத்தையுடன் சுத்தம் செய்தல் அவசியம் இல்லையேல் வாயில் வைக்க முடியாத படி கவிச்சி அடிக்கும் .. இரண்டு முறை கழுவிய பின்னர் , மஞ்சள் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் நன்கு கழுவிக்கொள்ளவும்

ஒரு கிலோ வாத்து கறிக்கு. ஒரு குழி கரண்டி வெண்ணெய் & அரைத்த இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன். மல்லி & மிளகு & சீரகம் & மஞ்சள் தூள் & 2 காய்ந்த மிளகாய் சிறிதளவு உப்பு சேர்த்து வேக விடவும் , குறைந்தது 8 விசில் விடலாம் ,

வாணலியில் சிறிதளவு நல்லெண்ணய் சேர்த்து சோம்பு & கடுகு & சீரகம் தாளித்து சிறிய வெங்காயம் & குடை மிளகாய் & ஒரு பச்சைமிளகாய் கறிவேப்பிலை நறுக்கிய இஞ்சி 1 ஸ்பூன் சேர்த்து வதக்கவும் சிவக்கும் தறுவாயில் ஒரு தக்காளி மற்றும் 1 ஸ்பூன் மிளகுதூள் மற்றும் தேவைக்கு உப்பு சேர்த்து வேக வைத்த கறியும் சேர்த்து மெதுவாக கிளறி 5 நிமிடங்கள் தண்ணீர் சுண்டும் வரை காத்திருந்தால் கோழியெல்லாம் பக்கத்திலேயே வர முடியாத சுவையுடன் வாத்து வருவல் ரெடி..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media