வாழைத்தண்டு சூப் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானபொருட்கள்:

நறுக்கிய வாழைத்தண்டு : ஒருகப்
நறுக்கிய கொத்தமல்லி : கால்கப்
பசு மஞ்சள் : கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 1
மிளகுத்தூள் : ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் : ஒரு தேக்கரண்டி
இந்துப்பு : தேவையான அளவு
வெண்ணெய் : ஒரு தேக்கரண்டி

செய்முறை:

வாழைத்தண்டு, கொத்தமல்லி, பச்சை மிளகாய் , பசு மஞ்சள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.

அதனை ஒரு கடாயில் ஊற்றி,அடுப்பில் வைத்து 5 நிமிடம்கொதிக்கவிடவும்.

பிறகு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் & வெண்ணெய் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

சுவையான வாழைத்தண்டு சூப் தயார் !

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media