வாழைப்பூ கட்லெட் , மின்ட் சட்னி – ராதிகா ஆனந்தன்

தேங்காய் பொடி, ஆளிவிதை , பாதாம் பொடி சேர்க்காமல் செய்தது.

சைவத்திற்கு பனீரை 50 கி மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி கெட்டி பதமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாழைப்பூ 150 கி, காளிஃபிளவர் 200 கி சுத்தம் செய்து ஈரம் போக துடைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரை நிமிடத்திற்கு நாலைந்து முறை விட்டு விட்டு ஓட்டவும்.. கைமா பதத்திற்கு இருக்கும்.. இதுல இப்போ பொடியாக நறுக்கிய இஞ்சி, சீரகத்தூள், மிளகாய் தூள், வீட்டில் தயாரித்த கரம் மசாலா, உப்பு, ஒரு கைப்பிடி பொடியா நறுக்கிய கொத்தமல்லி இலை, வெங்காயத்தாள்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பனீர் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து ஒவ்வொரு சிறு உருண்டைகளாக பிடித்து ( அசைவமாக இருந்தால் பனீருக்கு பதில் இந்த கலவையில் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்) தோசைக்கல்லை சுட வைத்து நெய் தடவி உருண்டைகளாக எடுத்து மெதுவாக கட்லெட் போல தட்டி மூடி வைத்து மிதமான தீயில் இரண்டு பக்கமும் 5 நிமிடம் பொன்னிறமாக வேகவைத்து சுட்டெடுக்கவும்.

மின்ட் சட்னி – கைப்பிடி அளவு புதினா, இரண்டு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.. உடனே பரிமாறவும். சட்னி கறுப்பாகாமல்,
நிறம் மாறாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறிது தேங்காய்
எண்ணெய்யில் இலைகளை போட்டு
வதக்கி அரைத்துக் கொள்ளவும்..

சமையல் குறிப்பு:

Follow us on Social Media