வாழைப்பூ கறி உருண்டை குழம்பு – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
கறி உருண்டைக்கு #
வாழைப்பூ 1
சின்ன வெங்காயம் 10
மிளகாய்தூள் 1/2 டீக
மஞ்சள் தூள் 1 டீக
பெருங்காயம் சிறிதளவு
நாட்டு பூண்டு 8
இஞ்சி சின்ன துண்டு
முட்டை 1
உப்பு தேவையான அளவு
வெண்ணெய்
செய்முறை#


மேலே கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.தண்ணீர் விட வேண்டாங்க.அரைத்த கலவையை சிறு உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.ஒரு முட்டையை உப்பு கரம்மசாலா போட்டு அடித்து வைத்து கொள்ளவும்.உருட்டிய உருண்டையை முட்டையில் முக்கி பணியாரக்கல்லில் வேக வைத்து எடுக்கவும்
குழம்புக்கு#
தேவையான பொருட்கள்#
சின்ன வெங்காயம் 10
பூண்டு 4
பேலியோ மசாலா 2 டேக
தக்காளி 1
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு கருவேப்பிலை நல்லெண்ணெய்.
சின்ன வெங்காயம்,பூண்டு,தக்காளி இவை மூன்றையும் நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.அரைத்த கலவையை தேவையான அளவு தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.பச்சை வாசம் போனதும் உருண்டையை குழம்பில் போடவும்.(விருப்பபட்டா தேங்காய் பால் ஊற்றி கொள்ளலாம்)
கடைசியாக வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை பெருங்காயம் போட்டு தாளித்து கொட்டவும்.
சுவையான வாழைப்பூ கறி உருண்டை குழம்பு ரெடி.குழம்பா வேண்டாம்னு நினைப்பவர்கள் கிரேவி பதத்தில் வைத்து கொள்ளலாம்.


# முட்டை கூட எடுக்காதவர்கள் முட்டைக்கு பதில் சிறிதளவு ஆளி விதை பவுடராக்கி சேர்த்து கொள்ளவும்.
செய்ய தேவையான நேரம் 40 நிமிடம்
4 பேருக்கு பரிமாரலாம்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media