வாழைப்பூ பொரியல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
வாழைப்பூ 1
(எந்த வகையும் ஓகே )
கீரை 1 கட்டு ( சிறியது _ எந்த வகையும் ஓகே)
சின்ன வெங்காயம் 5 நீள வாக்கில் அரிந்தது
பூண்டு 5 வட்டமாக அரிந்தது
கருவேப்பிலை சிறிதளவு
பெருங்காயம் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் 1 தேக
தாளிக்க கடுகு , சீரகம்,தேங்காய் எண்ணெய்
வர மிளகாய் 2
பச்சமிளகாய் 2
செய் முறை#
வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்யனும் ,நரம்பும் இதழ் ஒன்றையும் நீக்கனும்.சுத்தம் செய்து அரிந்து மோரில் போடவும்(கருப்பாகம இருக்கும்)
பாத்திரத்தில் நீர் ஊற்றி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.சில வகை பூக்கள் துவர்ப்பு தன்மை வாய்ந்தது,அவ்வகை பூக்களை வேக வைத்து நீரை வடித்து விடவும்.
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பொரிந்ததும் கறிவேப்பிலை வர மிளகாய்,பச்ச மிளகாய்,வெங்காயம்,பூண்டு பெருங்காயம்,கீரை (சுத்தம் செய்து அரிந்து கொள்ளவும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து வணக்கவும் ,நீர் ஊற்ற வேண்டாங்க கீரையில் உள்ள நீரே போதும்.கீரை நன்றாக வெந்ததும் வாழைப்பூவை போட்டு நன்றாக வணக்கவும்.தேவையென்றால் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும்.சுவையான வாழைப்பூ பொரியல் ரெடி.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media