வாழைப்பூ முட்டை பொரியல் & சிக்கன் குழம்பு – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள் #
வாழைப்பூ 1( சுத்தம் செய்து அரிந்து மோரில் போட்டு வைக்கவும்)
முட்டை 4
வெங்காயம் 1
பச்சமிளகாய் 2
வர மிளகாய் 2
பெருங்காயம் சிறிதளவு
மஞ்சள் தூள் 1 தேக
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை
செய் முறை#
வாழைப்பூவை மஞ்சள் தூள் தேவையான உப்பு போட்டு சிறிதளவு நீர் விட்டு குக்கரில் 1 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சோம்பு போடவும்,பொரிந்ததும் சிறிதாக அரிந்த வெங்காயம் , பெருங்காயம் பச்சமிளகாய்,வரமிளகாய்,கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கியதும் வேக வைத்த பூவை போடவும்.கடைசியாக 4 முட்டை உடைத்து ஊற்றவும்.முட்டைக்கு தேவையான உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வணக்கி எடுக்கவும்.
சிக்கன் குழம்பு#
தேவையான பொருட்கள்
சிக்கன் 1/2 கிலோ
சின்ன வெங்காயம் 7
இஞ்சி பூண்டு விழுது 2 மேக
தக்காளி 1
சீரகம் மிளகு 1 மேக
பேலியோ மசாலா 2 மேக
மிளகாய்தூள் 1/2 மேக
கறிவேப்பிலை சிறிதளவு
தாளிக்க சோம்பு கடுகு கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய்
செய் முறை#
வெங்காயம் தக்காளியை நன்றாக வணக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை சிக்கன் , தேவையான உப்பு,மசாலாத்தூள் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கியதும் அரைத்த கலவையை போட்டு தேவையான நீர் சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும்.சுவையான சிக்கன் குழம்பு ரெடி.குழம்பை சூப்பாக குடித்து விட்டு கறியை சாப்பிடுங்கள்.
செய்ய தேவையான நேரம் 25+25 நிமிடம்

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media