வாழைப்பூ முருங்கைகீரை பொரியல் – கணேஷ்

தேவையான பொருட்கள்:-

  1. வாழைப்பூ ஒன்று – 400 கிராம்
  2. முருங்கைகீரை – 100 கிராம்
  3. தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
  4. கடுகு – 1/4 ஸ்பூன்
  5. சின்ன வெங்காயம் – 10 எண் (சிறிதாக வெட்டி வைக்கவும்)
  6. கருவேப்பிலை – ஒரு கொத்து
  7. தேங்காய் துறுவல் – 2 டீஸ்பூன்
  8. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
  9. பேலியோ மசாலா – 1 டீஸ்பூன்
  10.  உப்பு – தேவையான அளவு

செய்முறை

சிறிது மஞ்சள்தூள் மற்றும் உப்பு கலந்த நீரில் வாழைப்பூவை சிறிது சிறிதாக நறுக்கி போட்டு தனியே வைக்கவும், முருங்கை கீரையை ஆய்ந்து நீரில் அலசி தனியே வைக்கவும்,

வாணலியில் தேங்காய் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்பு வாழைப்பூவை நீரில் இருந்து வடித்து எடுத்துப்போட்டு 1/2 டம்ளர் நீர் விட்டு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து பத்து நிமிடம் வெந்தபின், முருங்கை கீரையை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். பின்பு  பேலியோ மசாலா தூள் 1 டீஸ்பூன் போட்டு 3 நிமிடம் வதக்கி தேங்காய் துறுவல் தூவி  இறக்கினால் சுவையான *வாழைப்பூ முருங்கைகீரை பொரியல்* தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media