வாழைப்பூ ரசம் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
வாழைப்பூ 4 வரிசை சுத்தம் செய்து அரிந்து கொள்ளவும்.கடைசியாக உள்ள குருத்தையும் அரிந்து கொண்டேன்
மஞ்சள் தூள் 1 தேக
தக்காளி 1
சீரகம் 1 தேக
மிளகு 1 தேக
பூண்டு 10 பல் சிறியது
தாளிக்க கடுகு நெய் கறிவேப்பிலை பெருங்காயம் கொத்தமல்லி சிறிதளவு
வர மிளகாய் 2
செய் முறை#
பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் அரிந்த வாழைப்பூ மஞ்சள் தூள் தக்காளி பெருங்காயம் தேவையான உப்பு சேர்த்து மிதமான சூட்டில் மூடி போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.10 நிமிடம் நன்றாக கொதித்தாலே காய் வெந்துவிடும்.
ஒரு வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை வர மிளகாய் அரைத்த சீரகம் மிளகு பூண்டு (ரசத்திற்கு அரைக்கும் பதம்) பொடித்ததை நெய்யில் பச்சை வாசம் போகும் வரை வதக்கி ரசத்தில் ஊற்றவும்.5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும் .சுவையான வாழைப்பூ ரசம் ரெடி.
குழந்தைகளும் விரும்பி உண்பர் .சூப் மாதிரி குடித்து விட்டு காயை சாப்பிட்டு விடவும்.
துவர்ப்பு தன்மை சுத்தமாகவே இல்லை.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media