வெங்காய கோழி வருவல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

கோழிக்கறி : அரை கிலோ

கீழ்காணும் பொருட்களை கோழிக்கறியுடன் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு : 2 தேக்கரண்டி
வெங்காயம் : 2 (அரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் : ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது : 2
தேக்கரண்டி
கரம் மசாலா : 1தேக்கரண்டி
சீரகதூள் : 1 தேக்கரண்டி
சோம்புத்தூள் : 1 தேக்கரண்டி
நெய் : 2 தேக்கரண்டி
இந்துப்பு : தேவைக்கேற்ப

மேலும் தேவையானவை :

தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 3
கறிவேப்பிலை : சிறிது

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய் & கறிவேப்பிலை தாளித்து, அத்துடன் ஊற வைத்த கோழிக்கறியை மசாலாவுடன் கடாயில் சேர்த்து, மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

வெந்தவுடன் மூடியை திறந்து தண்ணீர் சுண்டி வரும் வரை பிரட்டி, வருவல் பதம் வந்தவுடன் இறக்கவும்.

சுவையான வெங்காய கோழி வருவல் தயார் !

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media