வெஜிடபுள் கட்லெட் | தக்காளி சாஸ் | யோகர்ட் ரெய்தா – யசோ குணா

பேலியோ காய்கறிகள் தேவைப்படும் அளவில் எடுத்து கொண்டு உடன் ஏதாவதொரு கீரை சேர்க்கலாம் ( நான் பாலக்கீரை எடுத்தேன் )

அரைத்த இஞ்சி பூண்டு விழுது ( இஞ்சி , பூண்டு , பச்சை மிளகாய் , 3 எண்ணிக்கை சின்ன வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளலாம் )

யோகர்ட் & வெண்ணெய் & எண்ணெய் தேவைக்கு.

சிறிதளவு சோம்பு , சீரகம் , மிளகு. , 2 மிளகாய் வற்றல் , பெருங்காயம் , வெந்தயம் , 1 துண்டு பட்டை சூடு ஏறும் வரை மட்டும் வறுத்து பொடிக்கவும் ( நீர் விடாமல் இருப்பதற்கே இப்படி செய்வது )

ப்ளக் சீட் 2 ஸ்பூன் , 10 எண்ணிக்கை பாதாம் பொடித்து வைத்து கொள்ளவும் ..

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடித்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும் , சிவந்தவுடன் இஞ்சி விழுது சேர்க்கவும் , பின்னர் காய்கறிகள் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி எடுக்கவும். இறக்கி பாதி சூடு ஆறிய பின்னர் ப்ளக் சீட் கலவையை சேர்க்கவும் .

பின்னர் உருண்டைகள் உருட்டி யோகர்ட்டில் பிரட்டி தோசை கல்லில் வெண்ணெயோ & எண்ணெயோ சேர்த்து வாட்டி எடுக்கவும்..

வெஜிடபுள் கட்லெட் ரெடி ..

யோகர்ட் ரெய்தா ;

யோகர்ட் ஒரு கப் , வெண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கி சிறிதளவு வெங்காயம் & கேரட் துருவல் & வெள்ளரி துருவல் & மா இஞ்சி அ கறி இஞ்சி துருவல் & ஒரு பச்சை மிளகாய் துருவல்.( இவையனைத்தும் தேவைக்கு சேர்த்து கொள்ளவும் ) உப்பு சேர்த்து கல்ந்தால் சுவையான ரெய்தா ரெடி .. எதற்கும் அருமையான ஒத்து ..

தக்காளி சாஸ் ;

3 தக்காளி & 4 பல் பூண்டு & 4 சிவப்பு மிளகாய் & தேவைக்கு புளி & சிறிதளவு மிளகு தூள் & உப்பு மிகக்குறைவாக சேர்த்து வேக வைக்கவும் வெந்த பின்னர் நன்கு மசித்து விதைகளை வடிகட்டி ( தண்ணீர் அதிகம் வேண்டாம் ) வேறு பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும் போது இறக்கி. ஆறிய பின் பழைய கெட்சப் பாட்டிலில் எடுத்து வையுங்கள் , இதன் ருசிக்கு நாக்கு சும்மா சுழட்டியடிக்கும் , பேலியோ சாஸ் அனைத்து உணவிற்கும் சிறந்த ஒத்து ! மட்டுமல்லாமல் இது ரெடி மிக்ஸ் போல் வீட்டிலிருந்தால் இதை உபயோகித்து ஐந்து நிமிடத்தில் ( சைவம் & முட்டை ) பல டிஸ் ரெடி பண்ணலாம் ..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media