வெஜிடபுள் & முட்டை ஃப்யூசன் அடை – RTN. கண்ணன்

தேவையான பொருட்கள் :

முட்டை : 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
குடைமிளகாய் – சிறிதளவு
துருவிய காரட் – 2
சிறிதாக நறுக்கிய முட்டைகோஸ் : 150 கிராம்
பச்சை மிளகாய் – 4 சிறிதாக நறுக்கியது
மிளகு சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
நெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி & கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

ஒரு இரும்பு கடாயில் நெய் விட்டு, கறிவேப்பிலை , பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது , வெங்காயம், முட்டைகோஸ், கேரட், தக்காளி & குடைமிளகாய் ஆகியவற்றை வரிசைப்படி ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும், முக்கால் பாகம் வதங்கியவுடம் (முழுவதும் வதங்காமல் இருந்தால் மட்டும் சாப்பிட சுவை தரும்), உப்பு மஞ்சள் தூள் & மிளகுத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.

ஆறியவுடன், முட்டைகளை சேர்த்து அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலக்கவும்.

ஒரு இரும்பு தவாவில் நெய் விட்டு அடைபோல் ஊற்றி எடுக்கவும்.

வெஜிடபுள் & முட்டை ஃப்யூசன் அடை தயார்.

தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவை கூடும்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media