வெஜ் கொத்துப் புரோட்டா & கத்திரிக்காய் காரச்சட்னி – ராதிகா ஆனந்தன்

அளவு – ஒரு நபருக்கு

முள்ளங்கி, முட்டைக்கோஸ்
இரண்டும் கலவையாக (200கி), பனீர் 200 கி
துருவிக்கொள்ளவும்.. தனியாக சிறிது வெண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் 1
நீளவாக்கில் மெலிதாக
அரிந்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு சோம்பு கசகசா பச்சைமிளகாய் சிறிது சிறிது சேர்த்து அரைத்து கொள்ளவும்..

வாணலியில் தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி, சீரகம் தாளித்து , நறுக்கிய வெங்காயம், அரைத்த விழுது போட்டு வதக்கி மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லிப்பொடி , கரம் மசாலா தலா அரைஸ்பூன் போட்டு பிரட்டி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குலையும் வரை வதக்கி தண்ணீர் தெளித்து தனியாக வதக்கின காய்கறி பனீர் கலவையை சேர்த்து உப்புப் போட்டு மூடிப் போடவும்..

மசாலா நன்கு வெந்து ஒன்றானப் பின் கைப்பிடி கொத்தமல்லி புதினா நறுக்கியது சேர்த்து மிளகுத்தூள் எலுமிச்சைச் சாறு கலந்து இரக்கவும்…

பின்குறிப்பு – அசைவத்திற்கு பனீருக்கு பதிலாக கடைசியாக இரண்டு முட்டை உடைத்து ஊற்றி கலக்கவும்.. அசைவக்குழம்பு ஏதேனும் மீதமிருந்தால் அதனையும் சேர்த்துக் கொள்ளலாம்…

கத்திரிக்காய் காரச்சட்னி

இரண்டு பச்சைக் கத்திரிக்காயை நெருப்பில் சுட்டு தோலுரித்துக் கொள்ளவும்.. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு 2 பல், மிளகாய் வற்றல் 3- 4 (அவரவர் காரத்திற்கேற்ப), சின்ன வெங்காயம் 4 , பெருங்காயத்தூள் சிறிது
போட்டு நன்கு வதக்கி ஆறவைத்துக் கொள்ளவும்..

பின் மிக்ஸியில் உப்பு போட்டு, சிறிது புளி அல்லது எலுமிச்சைச்சாறு அல்லது வதக்கிய தக்காளி சிறிது, வதக்கிய மற்ற அனைத்தையும் சேர்த்து அரைத்து பின் கடைசியில் சுட்டக் கத்திரிக்காயை சேர்த்து தண்ணீர் தேவைப்பட்டால் மட்டும் சிறிது தெளித்து
அரைத்து கொள்ளவும்..

அரைத்தப்பின் கடுகு கறிவேப்பிலை தாளித்தும் கலந்து கொள்ளலாம்..

பின்குறிப்பு – சட்னிக்கு பதிலாக ரைத்தா சேர்த்துக் கொள்ளலாம்..

சமையல் குறிப்பு:

Follow us on Social Media