வெஜ் பாய்ல்ட் எக் – ஹேமலதா

வெஜ் பாய்ல்ட் எக்:

தேவையான பொருட்கள் : முட்டை 4 , பெரிய வெங்காயம் 1 , தக்காளி 1 , கேரட் 1 , குடை மிளகாய் 3sp , முட்டை கோஸ் 4sp ,ஜீரகம் 1 /2 sp , இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள்,ஜீரா தூள் , மஞ்சள் தூள், உப்பு , பட்டர் 1sp , மல்லி இலை..

செய்முறை :
வாணலியில் பட்டர் போட்டு ஜீரகம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி கேரட் குடை மிளகாய் முட்டை கோஸ் எல்லாம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா மிளகாய் தூள், மல்லி தூள் ஜீரா தூள் மஞ்சள் தூள் உப்பு போட்டு வதக்கி மல்லி இலை தூவி எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கி ஆற விடவும்….
முட்டையின் மேல் பாகத்தில் ஸ்பூன் வைத்து லேசாக தட்டி மேல் ஓடை அரை இஞ் அளவுக்கு ஓபன் பண்ணி முட்டையின் வெள்ளை கருவை கொஞ்சம் ஒரு கிண்ணத்தில் கொட்டவும். இப்போது குழிப்பணியாரம் திருப்பும் கம்பியால் முட்டையின் உள்ளெ விட்டு மஞ்சள் கருவையும் வெள்ளை கருவையும் மெதுவாக கலக்கவும்…. இப்போது ஆறின மசாலாவை மெதுவாக உள்ளே சிறிது சிறிதாக போடவும் … நிறைய போடா வேண்டாம். இப்போது கம்பியை உள்ளெ விட்டு மசாலாவையும் முட்டையையும் மெதுவாக கலக்கவும். மசாலா நிரப்பிய முட்டையை சின்ன டம்ளர்றில் மெதுவாக வைக்கவும் … இதைபோல் எல்லா முட்டையிலும் மசாலாவை நிரப்பவும்…. இபோது இட்லி அண்டாவை அடுப்பில் வைத்து இட்லி தட்டை வைத்து அதில் முட்டை வைத்திருக்கும் டம்ளர்ரை வைக்கவும்…10 நிமிடம் வைத்து கம்பியை மெதுவாக முட்டையில் விட்டு பார்க்கவும் … வெந்து இருந்தால் முட்டை கம்பியில் ஒட்டாது. இல்லைனா கம்பியில் ஓட்டும்….. வெந்தவுடன் முட்டையை எடுத்து ஓடை மெதுவாக எடுத்து …. தட்டில் வைக்கவும்… இப்போது வெஜ் பாய்ல்ட் எக் ரெடி ….

சமையல் குறிப்பு :

Follow us on Social Media