வெஜ் வடை – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
காலிபிளவர் 200 கிராம்
கேரட் 2
பன்னீர் 100 கிராம்
சோம்பு 1 மேக
கரம்மசாலா 1 தேக
கறிமசாலா 1 தேக
மஞ்சள் தூள் 1/2 தேக
கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
பச்சமிளகாய் 2
வெங்காயம் 1
உப்பு தேவையான அளவு
நெய் தேவையான அளவு


செய் முறை#


காலிபிளவரை கொதிக்கும் தண்ணீரீல் போட்டு ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.கேரடை துருவிக் கொள்ளவும்.இரண்டையும் வெள்ளை துணியில் கட்டி சாறை பிழிந்து எடுத்துக் சாறை குடுத்துவிடவும்.பன்னீரை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் 2 சுத்து சுத்தவும் (காலிபிளவர் அரிசி பதம்) . காலிபிளவர் கேரடை நெய்யில் சிறிது வணக்கி எடுத்துக் கொள்ளவும்.மேலே கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.வடைதட்டி போடுவதை போல தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும் . மிதமான சூட்டில் நெய் தடவி மெதுவாக திருப்பவும் . பொறுமையா செய்யுங்க.குளிருக்கு ருசியான வடை சாப்பிடணும்ல?..
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்
இந்த அளவுக்கு 18 வடை வந்தது.
4 வடை உருண்டை ஆக்கி பணியாரக்கல்லில் போட்டு எடுத்தேன்.தட்டில் ஒரத்தில் வைத்துள்ளேன்.
என்னிடம் இந்த இரண்டு காய் தான் மீதம் இருந்தது(வாரக்கடைசி)முட்டைக்கோசுலும் பண்ணலாம்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media