வெண்டைக்கய் சீஸ் ஃபிரை, தயிர் பச்சடி & பன்னீர் பொரியல் – நசிமா இக்பால்

வெண்டைக்காய் சமையல்
=====================

வெண்டைக்கய் சீஸ் ஃபிரை
======================
வெண்டக்காய்
துருவிய சீஸ்
மிளகாய் தூள்
சீரக தூள்
உப்பு
நெய்
வெண்டக்காயை 2 ஆக கீீறி உப்பு ,மிளகாய் தூள்,சீரக தூள் சேர்த்து 10 நிமிடம் வைக்கவும்.ஃபிரை பேனில் நெய் ஊற்றி வெண்டக்காயை(ஒனறோடு ஒன்று சேராமல்) போடவும். அப்ப அப்ப திருப்பி கொஞ்சம் ஃபிரை ஆனதும் அதன் மேல் சீஸ் தூவி திருப்பி டோஸ்ட் ் செய்து எடுக்கவும்.

வெண்டைக்காய் தயிர் பச்சடி
=======================

வெண்டைக்காய் 200கி
தயிர் 1 கப்
வெங்காயம் 2 சிறியதாக அரியவும்
மல்லி இலை
உப்பு

தாளிக்க:

கடுகு,சீரகம்,கறிவேப்பிலை, 1வரமிளகாய்,தேங்காய் எண்ணெய்

வெண்டக்காயை சிறியத்தாக கட் செய்து வெறும் வடை சட்டியில் வதக்கவும். தயிர், வெங்காயம்,உப்பு,மல்லி இலை,வதக்கிய வெண்டக்காய் சேர்த்து தாளித்தவற்றையும் சேர்த்து மிக்ஸ் செய்தால் பச்சடி தயார்.

வெண்டக்காய் பனீர் பொரியல்
==========================

வெண்டக்காய். 300
வெங்காயம். 1 சிறியதாக வெட்டவும்
தக்காளி. 1
பனீர். 150 உதுரியாக்கி கொள்ளளவும்
மிளகாய் தூள்
சீரக தூள்
மஞ்சள் தூள்
உப்பு

கடுகு
கறிவேப்பிலை
வரமிளகாய்
நெய்
வெண்டைக்காயை கட் செய்து வதக்கவும்.கடாயில் நெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை, வரமிளகாய் தாளித்து வெங்காயம் பி்ன் தக்காளி சேர்த்து வதக்கி மசாலா தூள் உப்பு சேர்க்கவும்.அதில் வெண்டக்காய் சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.வெந்ததும் பனீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து 3நிமிடம் மூடி வைத்து இறக்கவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media