வெண்டைக்காய் கத்திரிக்காய் கூட்டு – ஜலீலாகமால்

தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் – 200 கிராம்
கத்திரிக்காய் – 50 கிராம்
தாளிக்க

நல்லெண்ணை – 5 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
வெங்காயம் – ஒன்று
தக்காளி பேஸ்ட் – கால் கப்
புளி தண்ணீர் கட்டியாக ஓரு மேசைகரண்டி
மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் _ சிறிது
உப்பு. தேவைக்கு
பச்சமிளகாய் – ஒன்று

செய்முறை

கத்திரிக்காயையும் வெண்டைக்காயையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.

ஒரு வாயகன்ற சட்டியில் நல்லெணணை ஊற்றி
கடுகு சீரகம் பூண்டு வெங்காயம் பச்சமிளகாய் ஒடித்து போட்டு தாளித்து
அரிந்து வைத்துள்ள கத்திரிகாய் வெண்டைக்காயை சேர்த்து எண்ணையில் நன்கு பிரட்டவும்
பிறகு தக்காளி பேஸ்ட் மசாலா தூள் வகைகள் உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்
புளி பேஸ்ட் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு கிளறி குறைவான தீயில் 5 நிமிடம் தம் போல வேகவைத்து இரக்கவும்.
கொத்துமல்லி தூவி பேலியோ காலிபளவர் தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்.

கவனிக்க வெண்டைக்காயை முதலில் கழுவி விட்டு அரியவும் இல்லை என் றால் குழ குழ வென போய் விடும்.

இது பிரியாணி வகைகளுக்கு செய்யும் எண்ணை கத்திரிக்காயை வெண்டைக்காய் சேர்த்து செய்துள்ளேன்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media