வெண்டைக்காய் தேங்காய் பச்சடி – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

வெண்டைக்காய் : 100 கிராம்
தேங்காய் துருவல் : 5 மேஜைக்கரண்டி
தக்காளி : 1
மிளகாய் வத்தல் : 2
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
சீரகம் : 2 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் : 6
கடுகு : 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் : 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை : சிறிது
உப்பு : தேவையான அளவு
வெண்ணை : ஒரு தேக்கரண்டி

செய்முறை :

வெண்டைக்காய் மற்றும்சி மூன்று சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நறுக்கிய மூன்று சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கி வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வெண்டைக்காய் வேகும் வரை வதக்கவும்.

தேங்காய் துருவல், தக்காளி , மஞ்சள் தூள், மிளகாய் வத்தல் , சீரகம் , மூன்று சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகும் வெண்டைக்காயில் சேர்க்கவும். சிறுதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வெண்ணை சேர்த்து இறக்கவும்.

கறிவேப்பில்லை தூவி பரிமாறவும்.

வெண்டைக்காய் தேங்காய் பச்சடி தயார் !

Follow us on Social Media