வெண்ணெய்,கிரீ்ம்,நெய் செய்முறை – பிருந்தா ஆனந்த்

*பசும்பால்,எருமை பாலில் வெண்ணெய் எடுக்கலாம்.பாக்கெட் முழு கொழுப்பு பாலில் எடுக்கலாம் ஆனால் பசும்பாலை விட ருசியும்,அளவும் குறைவாகவே இருக்கும்.
*பசும் பாலை நீர் ஊற்றாமல் காய்ச்சி ஆறவைத்து பிரிட்ஜில் வைக்கவும், பாலின் மேல் ஆடை படியும்,
*தேவையான பொழுது ஆடையை தொந்தரவு செய்யாமல் பாலை மட்டும் எடுக்க வேண்டும்.
*பால் தீரும்வரை பிரிட்ஜிலேயே இருக்க வேண்டும்.
*1 நாள் முடியும் பொழுது திக்கான ஆடை யை மட்டும் ஒரு டப்பாவில் எடுத்து பிரிசரில் வைக்க வேண்டும்.
* 1 மாதம் வரை இந்த ஆடைகளை பிரிசரில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
*பிறகு ஆடையை வெளியில் எடுத்து 6 மணி நேரம் சாதாரண வெப்ப நிலைக்கு வந்தவுடன் மறுபடி 1/2 மணி நேரம் பிரிட்ஜில் கூல் ஆகும்படி வைத்து வெளியில் எடுத்து
*பிளன்டர் அல்லது மிக்சி ஜாரில் ஆடையை இட்டு பிளென்ட் பண்ண வேண்டும்.
*நன்றாக கிரீம் பதத்திற்கு வந்துவிடும்,மில்க் கிரீம் தேவையானவர்கள் இந்த செய்முறையுடன் நிறுத்திக் கொண்டு கிரீமை பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
*வெண்ணெய் தேவைபடுபவர்கள் இந்த கிரீமுடன் ஐஸ் தண்ணீர்
சேர்த்து 2 நிமிடம் பிளென்ட் பண்ண வேண்டும்.
*வெண்ணெய் தனியாக
பிரிந்து வரும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
*மீதமுள்ள நீரை கீழே ஊற்றிவிடலாம்.
*சேர்த்து வைத்த ஆடையை பிரித்து 3 முறையாக பிளென்ட் செய்தால் நன்றாக வெண்ணெய் வரும்.
*எடுத்த வெண்ணெயை பாத்திரத்தில் ஐஸ் தண்ணீரை சேர்த்து நன்றாக அலசினால் மீதமுள்ள பால் வெளியேரும்.
*சுவையான வெண்ணெய் கிடைக்கும். பிரீசரில் வைத்து 1 மாதம் வரை உபயோகிக்கலாம்.
*வெண்ணெயில் சிறிது முருங்கை கீரை சேர்த்து உருக்கினால் சுவையான நெய் தயார்.கீரை இல்லாமலும் உருக்கலாம்.

{குறிப்பு: பசும்பாலில் வெண்ணெய் எடுத்தால் மஞ்சள் கலந்த வெண்ணெய் வரும், அதனால் உங்க வீட்டில் பால்காரர் ஊற்றும் பால் பசும் பாலா எருமை பாலா என்று கண்டறியலாம்.
*தயிர் உறை ஊற்றி அதில் உள்ள ஆடையை எடுத்து சேர்த்து வைத்தும் இதே முறையில் வெண்ணெய் செய்யலாம்,
ஆனால் பாலில் எடுக்கும் வெண்ணெயே ருசியாக இருக்கும்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media