வெண்பன்றி நெய்வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
வெண்பன்றி 1கிலோ எலும்பும் கறியுமாக
(கொழுப்பை உருக்கி வைத்துவிட்டேன் )
பூண்டு 15 பல்
இஞ்சி 3அங்குலம்
சீரகம் 1தேக
மிளகு 1தேக
வரமிளகாய் 10
கறிமசாலா 1தேக
எலுமிச்சை 1
உப்பு
தாளிக்க நெய் கடுகு கறிவேப்பிலை
செய்முறை#
வடச்சட்டியில் நெய்ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கறிவேப்பிலை போட்டு பின் அரைத்த இஞ்சி பூண்டு வரமிளகாய்(தண்ணீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்)கறிமசாலா தேவையான உப்பு போட்டு வதக்கவும்.கறியை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 3விசில் வைத்து எடுத்து வடச்சட்டியில் ஊற்றவும்.(குறைவான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்)..சுருள வதக்கி இறக்கினால் சுவையான வெண்பன்றி நெய் வருவல் ரெடி..இறக்கி வைத்து எலுமிச்சைசாறு கலந்து கொள்ளவும்…
செய்ய தேவையான நேரம் 40நிமிடம்..

சமையல் குறிப்பு :

Follow us on Social Media