வெண்பன்றி மென்வறுவல்☺- திருப்பூர் கணேஷ்

பேலியோ – அசைவம்

தேவையான பொருட்கள்:

1. வெண் பன்றிக்கறி – 1 கிலோ
2. தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
3. சின்ன வெங்காயம் – 15 (சிறிதாக வெட்டிவைக்கவும்)
4. பச்சைமிளகாய் – 5 (இரண்டாக கீறி வைக்கவும்)
5. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 5 தேக்கரண்டி ( https://www.facebook.com/…/tam…/permalink/1850598078560462/… )
6. தக்காளி – 2 (சிறிதாக வெட்டிவைக்கவும்)
7. கறிவேப்பிலை – 3 கொத்து
8. மல்லித்தழை – 10 தண்டு
9. மஞ்சள்தூள் – 2 ஸ்பூன்
10. உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க-
11. மிளகு – 2 தேக்கரண்டி
12. சீரகம் – 2 ஸ்பூன்
13. சோம்பு – 2 ஸ்பூன்
14. பட்டை – 4
15. கிராம்பு – 4
16. மல்லித்தூள் – 1-1/2 மேசைக்கரண்டி
17. மிளகாய்த்தூள் – 2 1/2 மேசைக்கரண்டி

11 முதல் 15 வரை உள்ள பெருட்களை கடாயில் மிதமான அடுப்பில் வறுத்து மிக்சி ஜாரில் போட்டு 16 மற்றும் 17ஐ சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

செய்முறை:

முதலில் கறியில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு கலக்கி 5 நிமிடம் கழித்து தண்ணீர் விட்டு 2 அ 3 முறை கழுவி குக்கரில் கறியை போட்டு உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 தேக்கரண்டி, அரைத்துவைத்த மசாலா, கறிவேப்பிலை 1 கொத்து, மல்லித்தழை 3 தண்டு கிள்ளி போட்டு, தண்ணி 1-1/2 டம்ளர் ஊற்றி கலக்கிவிட்டு 5 விசில் விட்டு இறக்கிவைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை 1 கொத்து போட்டு வதக்கி மீதி உள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி மல்லித்தழை 3 தண்டு கிள்ளி போட்டு 2 நிமிடம் ஓட்டிவிட்டு குக்கரில் உள்ள கறி மற்றும் கொழுப்பு மசாலா நீரை கொட்டி கலக்கி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி போட்டு கொதிக்கவிடவும். அதன் பின் நீர் சுண்டும் வரை ஓட்டிவிட்டு கடைசியாக கறிவேப்பிலை, மல்லித்தழையை சிறிது சிறிதாக கிள்ளி தூவி இறக்கவும்.

இப்போது சுவையான அருமையாக வெண்பன்றிக்கறி மென்வறுவல் கொழுப்பு சூழ தயார்.. ???

வாழ்க கொழுப்புடன்! வாழ்க வளமுடன்!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media