வெந்தயகீரை பன்னீர் முட்டை – ரத்தினகுமார்

சமையல் குறிப்பு: ரத்தினகுமார்
தேவையான பொருட்கள்
————————-
1. 1கட்டு வெந்தயகீரை
2. 50கிராம் பன்னீர்
3. 4 முட்டை
4. 1 பெரிய வெங்காயம் / 4 சின்னவெங்காயம்
5. 50கிராம் வெண்ணெய்
6. 2 பச்சைமிளகாய்
7. தேவையான அளவு உப்பு, மிளகு

செய்முறை
———–
1. 4 முட்டையை தனியே தண்ணீரில் வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்
2. 25கிராம் வெண்ணெயில் வெங்காயம், நீளவாக்கில் வெட்டிய பச்சைமிளகாயை வதக்கவும் பின் கீரையை போட்டு 15நிமிடம் வதக்குங்கள் சிம்மில் இருக்கட்டும். பின்னர் நீளவாக்கில் வெட்டிய பன்னீரையும் போட்டு மீதம் உள்ள 25கிராம் வெண்ணெயையும் போட்டு, உப்பு & மிளகு தூவி 5 நிமிடம் வதக்குங்கள்.
3. பின் ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்து அவித்த முட்டையை நறுக்கி அழகாக அடுக்கி உண்ணுங்கள்….

வெந்தயகீரையின் சிறுகசப்பு, பன்னீரில் கலந்த வெண்ணெய் மற்றும் முட்டையுடன் சேர்ந்த சுவை… ம்ம்… இறைவா….

Follow us on Social Media