வெந்தயக்கீரை பொடிமாஸ் & சுரைக்காய் ரசம் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை 1 கட்டு
சீரகம் 1 தேக
வர மிளகாய் 2
சின்ன வெங்காயம் 5 அரிந்தது
பூண்டு 5 அரிந்தது
முட்டை 2
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு நெய் கறிவேப்பிலை பெருங்காயம்
செய் முறை#
வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு சீரகம் பொரிந்ததும் கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் பூண்டு வர மிளகாய்நன்றாக வதக்கியதும் நன்றாக கழுவி அரிந்த வெந்தயக்கீரை போட்டு தேவையான உப்பு சேர்க்கவும்.நீர் தேவையில்லை கீரையில் உள்ள நீரே போதும்
மிதமான சூட்டில் வைத்து செய்யவும்.கீரை நன்கு வெந்ததும் 2 முட்டை உடைத்து ஊற்றவும்.(1 அளவான கட்டு கீரைக்கு 2 முட்டை,கீரையின் அளவு அதிகப்படுத்தினால் முட்டையை 3,4சேர்த்துக் கொள்ளலாம்)
முட்டைக்கு தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.கசப்புத்தன்மை சிறிதளவு கூட இல்லை.குழந்தைகளும் விரும்பி உண்பர்.
சுரைக்காய் ரசம்#
தேவையான பொருட்கள்
சுரைக்காய் (தேவையான அளவு துருவியது அல்லது சிறிதாக அரிந்தது)
மஞ்சள் தூள்
வர மிளகாய் 3
சீரகம் மிளகு 1மேக
தக்காளி 1 அரிந்தது
பூண்டு 7 பல்
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு கறிவேப்பிலை நெய் பெருங்காயம் கொத்தமல்லி கறிவேப்பிலை
செய்முறை#
பாத்திரத்தில் நீர் ஊற்றி அரிந்த அல்லது துருவிய சுரைக்காய் போட்டு வேக வைக்கவும்.தேவையான உப்பு மஞ்சள் தூள் தக்காளி சேர்க்கவும்.சிறிது நேரத்திலேயே காய் வெந்துவிடும்.
வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை பெருங்காயம் ரசத்திற்கு அரைத்த சீரகம் மிளகு பூண்டு (ஒன்று இரண்டா அரைத்தது) வரமிளகாய் போட்டு நன்றாக வதக்கியதும் ரசத்தில் ஊற்றவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media