வெந்தய சிக்கன் – ராதிகா ஆனந்தன்

ஒரு மிக்ஸியில்

அரை ஸ்பூன் வெந்தயம்,
மிளகு, சீரகம், சோம்பு , மஞ்சள் தூள், மல்லித்தூள் – தலா அரை ஸ்பூன்,
கிராம்பு, ஏலக்காய் – தலா 1,
பட்டை, இஞ்சி – சின்ன துண்டு
பூண்டு- 3 பல்
மிளகாய் பொடி- 1 ஸ்பூன்,

எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்..
குக்கரில் சிக்கன் 250 கி , அரைத்த விழுது, உப்பு, தண்ணீர் சிறிது சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து கறிவேப்பிலை, நறுக்கிய 1 பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை தூவி நன்கு வற்றி கெட்டியானதும் அரை ஸ்பூன் லெமன் ஜூஸ் கலந்து பரிமாறவும்.

சமையல் குறிப்பு:
Follow us on Social Media