வெந்தய சூப் – ஆனந்த் ரோஷன்

தேவையான பொருட்கள் :

தக்காளி – 1
சி.வெங்காயம் – 4
ப.மிளகாய் – 2
எலுமிச்சை சாறு – 1 பழம்
வெந்தயம் – 2 மே க
வெந்தயக்கீரை – சிறு கைப்பிடி
கடுகு – தே.அ
நல்லெண்ணெய் – தே.அ
பூண்டு – 6 பல்
மிளகு சீரகப்பொடி – 1 மே க
மஞ்சள் தூள் – தே.அ

செய்முறை :
தக்காளி கரைத்து எலுமிச்சை சாறுடன் தேவையான தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள், இடித்த பூண்டு ,மிளகு சீரகப் பொடி, உப்பு கலந்து வைக்கவும்.

நல்லெண்ணெய்யில் கடுகு, வெந்தயம் தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் ,ப.மிளகாய், கறிவேப்பிலை வதக்கி கரைசலை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து வெந்தயக்கீரை தூவி இறக்கவும்.

* குறிப்பு :
வெந்தயக்கீரை சேர்க்காமலும் செய்யலாம்.பேலியோ எடுக்காதவர்களுக்கும் சேர்த்து செய்து சாப்பிடலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media