வேகவைத்த கலப்பு காய்கறிகள் – ஜெயம் ஜெயா

சமையல் குறிப்பு:: ஜெயம் ஜெயா

ஒரு கப் காலிபிளவர்
ஒரு கப் புரோக்கோலி
1/2 கப் காளான்
ஒரு கப் கொடைமிளகாய்(பச்சை,மஞ்சள்,சிகப்பு கலந்தது)
4 பல் பூண்டு
சிறுது வெங்காயத்தால்
வாணலில் வெண்ணை அல்லது தேங்காய் எண்ணை விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயத்தாலின் அடி பாகத்தையும் இட்டு வதக்கவும்.பின் காலிப்பிளவர்,புரோக்கோலி இட்டு வதக்கவும்.அடுத்து காளான்,கொடைமிளகாய் போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் மிக சிறிய அளவு உப்பு சேர்க்கவும்.இறக்கும் நேரம் மிளகு தூள்,oregano,thyme தூவி கிளறி baking tray மாற்றவும். இந்த கலவை மேல் cheese தூவி 220 ்c 30முதல்40 நிமிடம் bake செய்யவும்.

Follow us on Social Media