ஸ்டஃப்டு முட்டை புடலங்காய் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

புடலங்காய் : 1 (நீளமானது)
முட்டை : 2
தேங்காய் துருவல் : 1 கப்
இஞ்சி துருவல் : 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் : 2 ( சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
கடுகு : அரை தேக்கரண்டி
வெங்காயம் : 1( சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை : சிறிதளவு ( சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
தேங்காய் எண்ணெய் : 3 தேக்கரண்டி
இந்துப்பு : தேவையான அளவு

செய்முறை :

புடலங்காயை நடு வாக்கில் 2 இன்ச் துண்டுகளாக நறுக்கி உள்ளே உள்ள விதைகளை நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் புடலங்காய் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி, மிளகாய் தாளித்து பின் வெங்காயம், முட்டை, தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள் & உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி, பொரியல் ஸ்டஃப்பிங் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.

தண்ணீரில் இருந்து புடலங்காயை எடுத்து (தண்ணீரை நன்றாக உதறி விடவும்), அதனுள் தயார் செய்த ஸ்டஃப்பிங் பொரியலை வைத்து ஸ்டஃப் செய்யவும்.

பின் கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, ஸ்டஃப் செய்த புடலங்காயை வைத்து மெதுவாக பிரட்டி 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.

சுவையான ஸ்டஃப்டு முட்டை புடலங்காய் தயார் !

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media