ஸ்பைசி ஃபிஸ் கறி – ரைஹானா

தேவையானவை – மீன் பொறிக்க
மீன்_1 kg
எலுமிச்சை – 2
மிளகு சீரக பொடி – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் பொடி – 3 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
நெய் – 20mட

தேவையானவை – கறிக்கு
இஞ்சி – 1 விரல் நீளம்
சி.வெங்காயம் – 1/4 கி
தக்காளி – 3
குடைமிளகாய் – 1
கரம் மசாலா – 1 ஸ்பூன்
மசாலா தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லி தழை கறிவேப்பிலை — தேவைக்கு
உட்பு — தேவைக்கு
நெய் – 2o ml

செய்முறை
1. மீனை 1எலுமிச்சை உப்பு போட்டு 10 நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி விடவும்…..

2 . கழுவிய மீனில் உப்பு மீதி உள்ள ஒரு எழுமிச்சை சாறு
மிளகாய் பொடி ,, மஞ்சள் தூள,, இஞ்சி பூண்டு பேஸ்ட் , மிளகு சீரக தூள் எல்லாம் கலந்து 1 மணி நேரம் .ஊறவிட்டு …தோசைதவாவில் நெய்தடவி பொரித்து எடுக்கவும்,,,,,,

3 , சிறிய வெங்காயம் , குடைமிளகாய் , தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்
இஞ்சியை துறுவி கொள்ளவும்

4 . அடுப்பில் கடாய் வைத்து நெய்யை ஊற்றவும்
அதில் கறிவேப்பிலை ,,,துறுவிய இஞ்சி . வெங்காயம்… குடைமிளகாய்் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்,,, பின்பு, கரம் மசாலா மசால துள் மிளகாய் தூள் போட்டு ,,, உப்பு போட்டு வதக்கவும் சிறிது நீர் தெளித்து வேக விடவும் நீர் வற்றி நெய் பிரித்து வரும் போது பொறித்தமீனை போட்டு ,,,கரண்டியால் அதிகம்கிளறாமல்
ஒரு பிரட்டு பிரட்டி விடவும். 10 நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும்

சும்மா நச்னு இருக்கும் ,,நண்பர்களே….
4 நபர் சாப்பிடும் அளவு இது

குறிப்பு = மீன் முள்ளில்லா ,,, வஞ்ரம்.,, மாஊ லா , போன்ற மீன்களாக இருக்க வேண்டும் .,, நன்கு சிவக்க பொறித்தெடுக்கனும் ,, மீனை இரண்டாக பிய்த்து போட்டு மேலும் சிதையாமல் கிளற வேண்டும் …. மசாலா தூள் என்பது சீரகம் , சோம்பு மிளகு மட்டும் கலந்த எங்கள் வீட்டு பொடி , இவை தனித்தனி பொடியாக இருந்தாலும் போட்டுக் கொள்ளலாம் ….

சமையல் குறிப்பு :

Follow us on Social Media