ஸ்பைசி மஷ்ரூம் காலிபிளவர் ஃப்ரை – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

காளான் – 200 கி
காலிபிளவர் – 1/2 பூ
வெங்காயம் – 2
தக்காளி விழுது – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
குடைமிளகாய் – 1
பஜ்ஜி மிளகாய் – 1
கரம் மசாலா – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – தே. அளவு
மல்லி தூள் – தே . அளவு
மஞ்சள் – 1/2 ஸ்பூன்
கொத்த மல்லி இலை – தே . அளவு
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு சீரக பொடி – 1 ஸ்பூன்
வெண்ணெய் – தே. அளவு

செய்முறை::

*வெண்ணெயில் சீரகம் தாளித்து வெங்காயம் ,தக்காளி விழுது, இஞ்சி பூண்டு விழுது,குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி
கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
*பிறகு நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து வதக்கவும்.
*காலிபிளவரை சுத்தம் செய்து மஞ்சள் , உப்பு கலந்த நீரில் சேர்த்து 10 நிமிடம் வைத்து நன்றாக அலசி எடுத்து வதங்கிய கலவையில் சேர்க்கவும்.
*அனைத்தையும் நன்றாக கிளறிவிட்டு 1/2 டம்ளர் நீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
*நீர் சுண்டியவுடன் மிளகு சீரக பொடி வெண்ணெய் சேர்த்து நன்றாக வறுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறினால்
*சுவையான ஸ்பைசி மஷ்ரூம் காலிபிளவர் ஃப்ரை தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media