ஸ்பைசி மிண்ட் பன்னீர் மஷ்ரூம் – டாலி பாலா

தேவை ..:

மஷ்ரூம் இருநூறு கிராம்
பன்னீர் இருநூறு கிராம்
வெங்காயம் இரண்டு
புதினா ஒரு கட்டு
பச்சை மிளகாய் மூன்று
பூண்டு ஐந்து பல்
வெண்ணை ஐம்பது கிராம்

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் , பூண்டு பொடியாக நறுக்கவும்
புதினா பச்சை மிளகாய் கொஞ்சம் நீர் விட்டு விழுமனாக அரைத்து வைக்கவும்

வெண்ணையை ஒரு வாணலியில் இட்டு அது உருகியவுடன் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி அதில் நன்கு கழுவிய மஷ்ரூம் சேர்த்து வதக்கவும் ….நன்றாக வதங்கி மேலே ப்ரௌன் கலராக மஷ்ரூம் மாறியவுடன் அதில் பன்னீர் சேர்த்து அளவாக உப்பும் அரைத்து வைத்த விழுதையும் சேர்க்கவும் ….நன்றாக பச்சை மணம் போக வதங்கியவுடன் இறக்கி வைக்கவும் ..கம கம என்று புதினா மணத்துடன் ஸ்பைசி மஷ்ரூம் பன்னீர் தயார் …

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1599232022

Follow us on Social Media