ஸ்லோகுக்கர் சூப் – செந்தழல் ரவி

 

ஸ்லோ குக்கர் லேம்ப் சூப் மிகவும் விரும்பமான ஒன்று. இன்றைக்கு பிறந்தநாள். ஸ்லோகுக்கரில் லேம்ப் போட்டுக்கொள்ளேன் என தங்கமணி ஆணையின்கீழ்..

செய்முறை:

ஸ்லோகுக்கரில் லேம்ப் (எலும்பாக கிடைப்பது விலையும் மிக குறைவு), ஒரு பெரிய வெங்காயம், ரெண்டு ஸ்பூன் மசாலா, உப்பு, ரெண்டு பச்சை மிளகாய்.

லோ குக்கிங்கில் 4 மணி நேரம், ஹை மோடில் 2 மணி நேரம், எடுத்த பிறகு மறுபடி லோ குக்கிங்கில் வைத்துவிட்டேன்.

சில நாட்கள் 12 மணி நேரம் / 24 மணி நேரம் கூட லோ குக்கிங் மோடில் வைப்பேன்.

அதில் இருக்கும் கொழுப்பெல்லாம் மேலே வந்து பார்க்க அற்புதமாயிருக்கும். நீங்களும் செய்து ரசிக்கவும். (இந்த ஸ்லோகுக்கர் வசதி எல்லாம் இல்லாத ஆதிமனிதனை நினைத்தால் பாவமாருக்கு. அந்த வருத்தத்தோடு இன்னொரு கப் சூப் சாப்பிட போறேன்).

Follow us on Social Media