ஹைதராபாத் மிர்ச்சி மசாலா – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

வெங்காயம் -2
தக்காளி – 2
எள் -1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் – 1/2 மூடி
பஜ்ஜி மிளகாய் – 8
தேங்காய் எண்ணெய்/
வெண்ணெய் – தே . அளவு
இஞ்சி – 1இன்ச்
பூண்டு – 6 பல்
கறிவேப்பிலை – தே . அளவு
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
உப்பு – தே . அளவு
மிளகாய் தூள் – தே . அளவு
மல்லி தூள் – தே . அளவு
மஞ்சள் தூள் – தே . அளவு
கொத்த மல்லி இலை – தே . அளவு

#செய்முறை::

*மிளகாயை இரண்டாக கீறி விதைகளை வெளியில் எடுத்து மிளகாயை எண்ணெயில் 2 நிமிடம் வதக்கி வைக்கவும்,
*1/2 ஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், எள் ,தேங்காய் துருவல்,இஞ்சி பூண்டு சேர்த்து வறுத்து அரைக்கவும்,
*எண்ணெய்யில் கடுகு ,சீரகம், கறிவேப்பிலை ,வெந்தயம் தாளித்து வெங்காயம் ,தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்,
*பிறகு அரைத்த மசாலா சேர்த்து மி.தூள், மல்லி தூள் ,மஞ்சள் தூள், உப்பு,சிறிது நீர்,
வதக்கிய மிளகாய் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி கொத்த மல்லி இலை தூவி இறக்கவும்.
*சுவையான ஹைதராபாத் மிர்ச்சி மசாலா தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media