ஆட்டு ஈர‌ல் ஃப்ரை

தேவையானபொருள்கள்

ஆட்டு ஈரல் – கால் கிலோ
வெங்காயம் – 3
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – ‌சிறிதளவு
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
மல்லித் தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி
சீரகத் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – 3/4 தேக்கரண்டி (தேவைக்கு)
பச்சை மிளகாய் – ஒன்று
மல்லித் தளை – சிறிது
எண்ணெய் – நான்கு தேக்கரண்டி
பட்டை – ஒரு சிறிய துண்டு

செய்முறை

*ஆட்டு ஈரலை நன்கு சுத்தம் செய்து கழுவி தேவையான அள‌வி‌ல் நறு‌க்‌கி எடு‌த்து வை‌க்கவு‌ம்.

*வெங்காயம் மற்றும் தக்காளி, ப‌ச்சை ‌மிளகாயை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

*வாண‌லியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய பட்டை போட்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வக்கவும். தக்காளியை சேர்த்து வதக்கவும்.

*த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம் ஈர‌ல் ம‌ற்று‌ம் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில் வேகவிடவும்.

*நன்கு வெந்தது‌ம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொத்துமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்

Follow us on Social Media