கீரை தயிர் பச்சடி – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

பொடியாக அரிந்த கீரை : 2 கப்
தயிர் : 2 கப்
கடுகு : தாளிக்க
சீரகம் : தாளிக்க
துருவிய இஞ்சி : 1 தேக்கரண்டி
நசுக்கிய பச்சை மிளகாய் : 1 தேக்கரண்டி
பெருங்காயப்பவுடர் : அரை தேக்கரண்டி
பொடியாக அரிந்த சிறிய வெங்காயம் : அரை கப்
தேங்காய்த்துருவல் : 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் : 1 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு

செய்முறை :

கீரையை சிறிது நீரில் குழைய வேக வைத்து, ஆறியதும் தயிரில் சிறிது உப்புடன் கலக்கவும்.

எண்ணெயை சூடாக்கி கடுகைப்போடவும். அது வெடித்ததும் சீரகம், பெருங்காயம் போட்டு, சற்று வதக்கி, பின் இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்த்து சற்று வதக்கவும்.

பிறகு தேங்காய்த்துருவல் சேர்த்து, சிறிய வெங்காயத்தையும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி தயிரில் கொட்டிக் கலக்கவும்.

கீரை தயிர் பச்சடி தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media