குடல்கறி காய்கறி கூட்டு – ராதிகா ஆனந்தன்

முதலில் மிக்ஸியில் 1 சில்லு தேங்காய், 1 தக்காளி, அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் மிளகு, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் (தலா 1) போட்டு , முழு சின்ன வெங்காயம் 6, பூண்டு 2, பச்சை மிளகாய் 1 போட்டு வதக்கி, நன்கு வெந்நீரில் பலமுறை அலசிய குடலை (200 கி)
போட்டு பிரட்டி மஞ்சள் தூள், மிளகாய் தூள் 2 பெரிய ஸ்பூன்,
மல்லித்தூள் அரை ஸ்பூன் போட்டு நல்லா வதக்கி அரைத்த விழுது, உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் ஊற்றி 6 – 7 விசில் வைக்கவும். வெந்ததும் நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய் 1, முருங்கைக்காய் 1 சேர்த்து 1 விசில் வைக்கவும்
இறுதியில் நன்கு வற்றி வரும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்..

சமையல் குறிப்பு:

Follow us on Social Media