க்ரீன் சில்லி சிக்கன் / மட்டன் / போர்க் – தீபா

சமையல் குறிப்பு : தீபா

தேவையான பொருட்கள்
மஞ்சள் தூள்
மிளகுத்தூள்
கரம்மசாலா
உப்பு

அரைக்க
புதினா
மல்லி
ப.மிளகாய்
கறிவேப்பிலை
இஞ்சி
பூண்டு
வெங்காயம்

தாளிக்க
பட்டர்
கறிவேப்பிலை
வெங்காயம்
தயிர்

செய்முறை
மட்டன்/சிக்கன்/போர்க்குடன் மஞ்சள், மிளகு, கரம்மசாலா, உப்பு, அரைத்த மசாலா அனைத்தையும் கலந்து 1/2மணி நேரம் வைக்கவும். அடிகணமான பாத்திரத்தில் ஒரு spoon எண்ணெய்/நெய் ஊற்றி மசாலாவுடன் போர்க்கை போட்டு வேக வைக்கவும் கறி நன்கு வெந்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் சிறிது பட்டர் போட்டு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி அடுப்பை அனைத்து விட்டு 2spoon தயிர் விட்டு கலக்கவும். கறியையும் போட்டு கிளறினால் சுவையான green chilli chicken/mutton/pork ரெடி.

இந்த சுவையான ரெஸிப்பியை வழங்கிய தீபா அவர்களுக்கு நன்றி.

Follow us on Social Media