பன்னீர் மிளகு கறி – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்##
பன்னீர் 200 கிராம்
மிளகு 1 மே.க.
சீரகம் 1 மே.க.
இஞ்சி 1 இன்ச்
பூண்டு 20
வெங்காயம் 1
கறிவேப்பிலை 1 கைப்பிடி அளவு
மிளகாய்தூள் 1 தே.க.
மஞ்சள் தூள் 1 தே.க.
தனியா தூள் 1 மே.க.
உப்பு தேவையான அளவு
புதினா கொத்தமல்லி சிறிதளவு
எலுமிச்சை சாறு சிறிதளவு(தேவைப்பட்டால்)
தாளிக்க சோம்பு கடுகு வெண்ணெய்

15037178_915937808539920_1333467495365981330_n
செய்முறை#
கொத்தமல்லி புதினா தவிர மேலே கொடுத்துள்ள வற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.வடச்சட்டியில் வெண்ணெய் விட்டு உருகியதும் கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை போடுங்க.மிக்சியில் அரைத்த கலவையை வடச்சட்டியில் ஊற்றி தேவையான உப்பு போடவும்.பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.அடுத்து பன்னீரை போட்டு கண் கரண்டியில் பன்னீர் உதிர்ந்து விடாமல் மெதுவாக திருப்பி விடவும்.மிதமான தீயீல் வைத்து செய்யவும்.கடைசியாக புதினா கொத்தமல்லி தூவி பரிமாரவும்.
செய்ய தேவையான நேரம் 20 நிமிடம்.
பூண்டு விரும்பவில்லை என்றாலும் போட தேவையில்லை.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media